கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் – ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் கொண்டு வரும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. நீட் தேர்வு,…

தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் கொண்டு வரும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை , பல்கலைக்கழக துணை வேந்தர்கள் விவகாரம் உள்ளிட்டவற்றில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதேபோல டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சில கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாகவும், அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் கொண்டு வரும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு ஆளுநர் ஆர்,என்.ரவி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.  ஒரே பாடத்திட்டத்தை கடைபிடிக்க தேவையில்லை என பல்கலைகழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிக்கை அனுப்பியுள்ளார்.

ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வரும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஒரே பாடத்திட்டம் மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் எனவும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.  பல்கலைகழக்கங்கள் தங்கள் பாடத்திட்டத்தை தாங்களே வடிவமைக்கலாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.