கோவை மாவட்டம் கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறியதால், அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கணியூர் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆழ்துளை கிணறுகள் மூலம் நேரடியாக பூமிக்கு அடியில் செலுத்தப்படுவதால் நிலத்தடி நீர் பச்சை நிறமாக மாறிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நிலத்தடி நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில், பல்வேறு ரசாயன வேதிப்பொருட்களின் தன்மை இருப்பதும், பயன்படுத்த உகந்தது அல்ல என்பதும் தெரியவந்ததாக கூறுகின்றனர்.
இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.