வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பு

மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் அருகே தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் மற்றும் அனுமந்தை ஆகிய கிராமங்களுக்கு இடையில் கழுவெளி பகுதியில் தரைப்…

மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் அருகே தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் மற்றும் அனுமந்தை ஆகிய கிராமங்களுக்கு இடையில் கழுவெளி பகுதியில் தரைப் பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலமானது வண்டிப்பாளையம் கிராமத்தை அடுத்த ஓமிப்பேர், நடுகுப்பம், கிளாப்பாக்கம், நாணக்கால் மேடு ஆகிய கிராமங்களையும்

அனுமந்தை அடுத்த ஆட்சிப்பாக்கம், ஊரணி, பாலக்காடு, ஆத்திக்குப்பம், கீழ் பேட்டை, செட்டி நகர், செட்டி குப்பம், செய்யங்குப்பம் ஆகிய கிராமங்களை இணைக்கும் முக்கிய தரைப்பாலம் ஆக வண்டிப்பாளையம் கிராம தரைப்பாலம் அமைந்துள்ளது.

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த தரைப்பாலம் ஆனது வெள்ள நீரால் மூழ்கி உள்ளது. இதனால், அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு நகரத்திற்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தரைப்பாலத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் சார்பில் பல்வேறு முறை கோரிக்கை வைக்கப்படுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.