காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சென்னையில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தி யுள்ளார்.
கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை எதிரொலியாக, புதுச்சேரி முதல் மகாபலிபுர ம் வரை வாகன போக்குவரத்து குறைவாக காணப்படுகிறது. வழக்கமாக வாகன போக்கு வரத்து அதிகம் காணப்படும் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி இருக்கிறது. தற்போது ஒரு சில வாகனங்கள் மட்டுமே அங்கு செல்கின்றன. தற்போது மரக்காணம் கூணிமேடு பகுதியில் காற்று வீச துவங்கி உள்ளது.








