முக்கியச் செய்திகள் இந்தியா

கடைக்குள் புகுந்த பைக், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கடை ஊழியர்கள்

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் துணி கடைக்குள் புகுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரிலுள்ள பஜார் வீதியில் இருக்கும் துணி கடைக்குள் கடந்த 8ஆம் தேதி இளைஞர் ஒருவர் அதிவேகமாக ஓட்டி வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. இந்த சம்பவத்தில் கடையில் வேலை செய்யும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கடைக்குள் புகுந்த மோட்டார்சைக்கிளை கைப்பற்றி அதனை ஒட்டி வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளின் பிரேக் திடீரென்ற பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விட்டது என்று கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போலீசார் அவர் கூறியது உண்மை இருப்பதை உணர்ந்து இதுபோல் இனி வேகமாக செல்ல கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

C-17 குளோப்மாஸ்டர் – ராணுவத்தின் ராஜாளி பறவை

Halley karthi

மத்திய அரசை எந்தப் பெயரால் அழைத்தாலும், அதிகாரத்தை குறைக்க முடியாது: வானதி சீனிவாசன்

Gayathri Venkatesan

நிரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர எந்த தடையும் இல்லை!

Gayathri Venkatesan