IPL 2026 குவாலிபையர் 1 : டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு!

பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இன்று மோதுகிறது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் குவாலிபையர் 1-ல் மோதுகின்றன. இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்த ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணி முதலாவதாக களமிறங்கி உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும். இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் ஏற்கனவே 2 முறை மோதி இருக்கின்றன. இதேபோல் ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் பதிலடி கொடுத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.