ஒட்டகத்தில் மணமகன் ஊர்வலமா? – நடவடிக்கை எடுத்த போலீசார்!

கேரளாவின் பரபரப்பான சாலையில் ஒட்டகத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றதை தொடர்ந்து,  மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.   கேரளாவை சேர்ந்தவர் ரிஸ்வான் என்பவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதனைத்…

கேரளாவின் பரபரப்பான சாலையில் ஒட்டகத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றதை தொடர்ந்து,  மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.  

கேரளாவை சேர்ந்தவர் ரிஸ்வான் என்பவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து ஒட்டகத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.  இந்த ஊர்வலம் வெடி மற்றும் பேண்ட் வாசிப்போடு நடைபெற்றது.  இந்த ஊர்வலத்தில் 25-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  இந்த ஊர்வலம் கேரளாவின் பரபரப்பான சாலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைபூச திருவிழா 2-ம் நாள் – அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!

இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.  இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மணமகன் ரிஸ்வான் மற்றும் அவரது உறவினர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.