முக்கியச் செய்திகள் குற்றம்

கந்து வட்டி காரணமாக மளிகைக் கடை உரிமையாளர் தற்கொலை!

சென்னை கொரட்டூரில் கந்து வட்டி காரணமாக தற்கொலை செய்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மளிகைக் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 6வது தெருவில் வசித்து வந்தவர் செல்வகுமார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ள நிலையில், செல்வகுமார் அதே பகுதியில் கடந்த 40 வருடங்களாக மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடன் வாங்கிய செல்வகுமார், அதிக கந்து வட்டி காரணமாக அவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

செல்வகுமாரின் மனைவி

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக செல்வகுமார் தனது கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் செல்வகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்வகுமார் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். கொரட்டூரை சேர்ந்த தியாகராஜன், பிரகாஷ் ஆகியோரிடம் கடன் வாங்கியதாகவும் அவர்கள் அதிக கந்து வட்டி கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் செல்வகுமார் கடிதத்தில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தியாகராஜன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!

Ezhilarasan

நியாயவிலைக் கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவு

Gayathri Venkatesan

கொரோனா பாதிப்பு: முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்

Halley karthi