முக்கியச் செய்திகள் சினிமா

ஆபரேஷனுக்கு பின் வீடு திரும்பினார் விஜே அர்ச்சனா

அறுவை சிகிச்சை செய்துகொண்ட சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா வீடு திரும்பியுள்ளார்.

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் சில திரைப்படங்களில் நடித்துள் ளார். பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் அவருக்கு மூளையில் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர், அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவர் மருத்துவமனையில் இருப்பது போலவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் சில நாட்களுக்கு முன், புகைப்படங்களை வெளியிட்டு அவர் மகள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அர்ச்சனா, இப்போது வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார். அவர் வீல்சேரில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அந்த வீடியோவையும் அவர் மகள் வெளியிட்டுள்ளார்.

அதில், அர்ச்சனா தனது ரசிகர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது, தனக்கு மறுஜென்மம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்

கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அதிரடி

Halley karthi

மார்ச் -8 பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி: ஜெகன்மோகன் ரெட்டி

Jeba Arul Robinson