டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் – தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை!

டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் பச்சை பயிறு கொள்முதல் கடந்த ஒரு வார காலமாக மத்திய அரசின் விதிமுறையின் காரணமாக தடைபட்டுள்ள இந்த கொள்முதலை மீண்டும் பரிசீலினை செய்து விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் நடத்திய விவசாயிகளுடனான கலந்துரையாடலில், பச்சை பயிற்றில் பழுப்பு மற்றும் கருப்பு நிற பயிர்கள் இருப்பதால் மத்திய அரசு
கொள்முதல் செய்ய மறுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் என்றும் தமிழ்நாடு அரசு தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்து பயிர்களும் ஒரே தரத்தில் தான் உள்ளது என அறிக்கைகளை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சான்று அளிக்கப்பட்ட பயிர்களை பயிரிடும் பட்சத்தில் அதை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நிச்சயமாக கொள்முதல் செய்வோம் என அதிகாரிகள் உத்தரவளிக்கும் பட்சத்தில் அதை பயிரிடுவோம் என தெரிவித்துள்ளனர். அத்துடன்  தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஒரு வார காலமாக தடைப்பட்டுள்ள பச்சை பயிறு கொள்முதலை மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.