ஆயிரக்கணக்காண முட்டைக் கோழி பண்ணை உள்ள நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கதுடன் காணப்படும் . இந்த நிலையில் முட்டையின் கொள்முதல் முன்பைவிட சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.45 ஆக இருந்த நிலையில், 05 காசுகள் உயர்த்துள்ளது. அதன் காரணமாக ரூ.5.50 ஆக முட்டை விலையை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் ஏற்பட்ட முட்டை விலை உயர்வால், சென்னையிலும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று(ஜூன்.23) முதல் 6.10 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.









