“கார்கில் போரில் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி” – பிரதமர் நரேந்திர மோடி!

கார்கில் போரில் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில், கார்கில் போர் வெற்றி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “கார்கில் போர் வெற்றி நாளன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் காட்டிய துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நமது நாடு அந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது. மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அவர்களின் வீரம், என்றென்றும் நாட்டின் பெருமையாக நிலைத்திருக்கும். அவர்களின் அசைக்க முடியாத நாட்டுப்பற்றும் கடமை உணர்வும் தலைமுறைகளைத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.