புனேயிலிருந்து அனுப்பப்பட்ட கோவிட் ஷீல்ட், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன.
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி, கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில், புனேயிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன. முதல் கட்டமாக, தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி 5,36,500 கோவிட் ஷீல்ட் மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து, தமிழக மருந்து கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும் தடுப்பூசிகள், அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று மாலை அனுப்பி வைக்கப்பட உள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: