முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.

கிரிப்டோகரன்சிகள் பற்றிய பேச்சு கடந்த சில நாட்களாக பரபரப்பான பேச்சாக இருக்கிறது. அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று விளம்பரங்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த கரன்சிகளுக்கு பல்வேறு நாடுகள் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்தியாவில் இந்த கரன்சிகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்த கரன்சிகள் மீது உலகம் முழுவதும் சந்தேக கண் இருக்கிறது.

இந்நிலையில், அனைத்து தனியார் கிரிப்டொ கரன்சிகளையும் தடைசெய்யும் வகையில் தனி சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை, டிஜிட்டல் கரன்சி மசோதாவை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கிரிப்டோ கரன்ஸிகளுக்கு மாற்றாக இந்திய ரிசர்வ் வங்கியே தனியாக டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோகரன்சிகள் அச்சுறுத்த லாக இருக்கின்றனர் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்!

Jeba Arul Robinson

விதிமுறை மீறல்: ரூ.10,000 கோடி அபராதம்.. பிளிப்கார்ட்-டுக்கு நோட்டீஸ்

Gayathri Venkatesan

விவாகரத்து அறிவிப்புக்கு பின் முதன்முறையாக டிவி நிகழ்ச்சியில் தோன்றும் சமந்தா

Saravana Kumar