உருவாகிறது உலகின் முதல் ’பிட்காயின் நகரம்’: என்னவெல்லாம் இருக்கும்?

உலகின் முதல் பிட்காயின் நகரத்தை உருவாக்க இருப்பதாக மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயூப் புகெலே அறிவித்துள்ளார். பிட்காயின் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு இந்த…

உலகின் முதல் பிட்காயின் நகரத்தை உருவாக்க இருப்பதாக மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயூப் புகெலே அறிவித்துள்ளார். பிட்காயின் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு இந்த நகரம் உருவாக்கப்படுகிறது.

ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாகk கருதப்படும் கிரிப்டோ கரன்சி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிஜிட்டல் வடிவ கரன்சி என்றும் வெர்ச்சுவல் கரன்சி என்றும் சொல்லப்படும் இந்த கரன்சிகள், அனைத்து நாடுகளிலும் செல்லத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. பிட்காயின், எத்திரியம், ட்ரோன், ஷிபா உட்பட ஏராளமான கிரிப்டோ கரன்சிகள், தற்போது புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கூடவே இந்த கரன்சி மீது பல்வேறு நாடுகள் சந்தேகக் கண்களையும் வைத்துள்ளன. பல நாடுகள் இதற்கு அங்கீ காரம் அளிக்கவில்லை.

இந்நிலையில், உலகின் முதல் பிட்காயின் நகரத்தை கட்டமைக்க போவதாக எல் சால்வடார் நாடு அறிவித்துள்ளது. அந்த நாட்டின் தென் கிழக்கில், லா யூனியன் ( La Union) நகரில் இந்த நகரம் அமைகிறது. இங்கு குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகள், பொழுது போக்கு மையங்கள், உணவகங்கள் மற்றும் விமான நிலையம் ஆகியவை அமைய இருக்கிறது. இங்கு முதலீடு செய்து, சம்பாதிக்கும் பணத்திற்கு வாட் வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் வருமான வரியோ, சொத்து வரியோ கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இங்கே முதலீடு செய்து நீங்கள் விரும்பும் பணத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள், இது முழுமையான சுற்றுச்சூழல் நகரம். இங்கு வசூலிக்கப்படும் வாட் வரியில் பாதியை நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் மீதி, பிட்காயின் பத்திரங்களுக்காகவும் பயன்படுத்தப்பட இருக்கிறது. நகரத்தின் உள்கட்டமைப்புக்காக 3 லட்சம் பிட்காயின்கள் செல்வாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று நயூப் புகெலே தெரிவித்துள்ளார்.

 

-ஏக்ஜி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.