முக்கியச் செய்திகள் தமிழகம்

பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து போக்குவரத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோ மீட்டர் என உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை இனி வரும் காலங்களில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவுப் பேருந்துகள் அல்லாத பிற அரசு பேருந்துகளின் ஆயுட் காலம் தற்போது ஏழு லட்சம் கிலோ மீட்டர் அல்லது ஆறு ஆண்டு காலம் என்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இனி வரும் காலங்களில் ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், புதிய சாலை வசதிகள், நவீன வடிவமைப்பு காரணமாக ஆயுட் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புதிதாக ஆசிரியர்கள் நியமனம்? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

Halley karthi

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!

Gayathri Venkatesan

யூடியூபர் மதன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்கவேண்டும்: நீதிமன்றம்