முக்கியச் செய்திகள் இந்தியா

கிரிக்கெட் விளையாடிய ஆந்திர முதலமைச்சர்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாடியதை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அவர், கடப்பாவில் உள்ள விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய சென்றார். அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் திடீரென ஜெகன் மோகன் ரெட்டியும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.

கடப்பா எம்.எல்.ஏ அபினேஷ் ரெட்டி பந்துவீச, ஜெகன்மோகன் ரெட்டி பேட்டிங் செய்தார். ஆய்வுப் பணிக்கு வந்த முதலமைச்சர் திடீரென ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடியதை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ரஷ்யாவின் ‘சிர்கான்’ ஏவுகணை சோதனை வெற்றி

Vandhana

சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்

Saravana Kumar

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு: உடைந்தது பாலம், 9 பேர் உயிரிழப்பு

Gayathri Venkatesan