பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதையடுத்து அவர்மீது பதிவு செய்துள்ள மூன்றாவது வழக்கை போக்சோ சட்டத்தில் பதிவு செய்ய காவல்துறையினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறை பதிவு செய்த இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தலைமறைவான பாபாவை பிடிக்க தனிப்படையினர் டெல்லி விரைந்திருந்தனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து தற்போது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது வழக்கை போக்சோ வழக்காக மாற்ற சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







