ஆளுநர் உரை விவகாரம் : அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு……!

ஆளுநர் உரை தேவையில்லை என அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். ஆனால் இன்று சட்ட மன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி,  ஆளுநர் ஆர்.என். ரவி,  தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். ஆளுநர் ஆர்.என். ரவி இவ்வாறு சட்டமன்றத்தில் உரையை புறக்கணிப்பது 4-வது முறையாகும்.

இந்த நிலையில்  தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ‘ஆளுநர்ConstitutionalAmendment உரை தேவையில்லை’ என அரசியல அமைப்பு திருத்தம் (ConstitutionalAmendment) கோருவோம்!

அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.

அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள் நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை  ”பிடிவாதமான ஆளுநர்” (Recalcitrant Governor) என தி இந்து தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது”

என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.