தேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்

தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்…

தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பங்கேற்றார். அப்போது காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த குறி சொல்லும் பெண்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமது எதிர்காலம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கல்வியை பொதுப்பட்டியிலும் மாநில பட்டியிலும் இல்லாமல் ரகசியமாக வைத்து உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதை அவர் தான் விளக்க வேண்டும் என்று அவர், தமிழகம் தான் மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தபட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்யப்படுவது
தொடர்ந்து நடக்கிறது எனவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டு
கொண்டு வருகிறது என்ற அவர், எல்லை தாண்டி கிடைக்கும் மீன் வளத்தை இந்திய எல்லைக்குள் அந்த வளத்தை கிடைக்க மத்திய அரசு திட்டத்தின் மூலம் மீன் குஞ்சுகளை விடும் புதிய திட்டத்தை தொடங்கி மீன்வளத்தை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்காலம் எனவும் கருத்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.