முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உள்கட்டமைப்புகளை அரசு மேம்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் புதிய தொழில் கொள்கைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். மக்கள் அனைவரும் வீட்டு வசதியை பெறுவதற்காக கிராம மற்றும் நகர்ப்புற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது; மனைப்பிரிவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஒற்றைச்சாளர முறையை அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 49 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் நாட்டிலேயே நகர்மயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் நாங்கள் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக நகரங்கள் – கிராமப் புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதனால் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு; யாருக்கு வாய்ப்பு?

EZHILARASAN D

பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்

Halley Karthik

டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டி இல்லை? கமல்ஹாசன்

EZHILARASAN D