ஓசூர் மாவட்டம் உத்தனப்பள்ளியில் 5வது சிப்காட் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனக் கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் அமைக்க, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதால் அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான செல்லக்குமார், சிப்காட் அமைக்க உள்ளதாகத் தெரிவித்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுடன் உறையாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 80% மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முடியும் என்றும், 5வது சிப்காட் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகள் வேண்டாம் எனக் கூறவில்லை, என்றும் தரிசு நிலங்களில் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.