முறைகேடு புகார்: இன்று மறுவாக்கு பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடந்து முடிந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடந்து முடிந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு நிறைவுபெற்றது.

இதில், குறிப்பிட்ட வார்டுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தன. இதனை அடுத்து புகார்கள் எழுந்துள்ள சென்னை, மதுரை உள்பட ஐந்து வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 1 வாக்குச்சாவடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள், திருவண்ணாமலை நகராட்சியில் இரண்டு 2 என ஐந்து வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.