#GoldRate | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 56,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 56,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.அந்த வகையில், செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

சென்னையில் நேற்று (செப்.23) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.55,840க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,980க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்க விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,000-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 56,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 98 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.