துபாயிலிருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அதில் சென்னையை சோ்ந்த 8 போ் ஒரு குழுவாக வந்தனா். அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து உடமைகளை சோதனையிட்டனா். எதுவும் இல்லை. சந்தேகம் தீராமல் தனி அறைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா்.
அவா்களின் உள்ளாடைகள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் மடிப்புகளில் தங்க பேஸ்ட் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 9 கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி. இதையடுத்து 8 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.







