மதுரை விமான நிலையத்தில் 91 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..

மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 91 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை…

மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 91 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, பயணி ஒருவரின் உடமைகளில் களிமண் உடன் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் அளவு 1 கிலோ 436 கிராம் எனவும், அதன் மதிப்பு 91,61,680 ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.