GOLD & SILVER RATE : இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த வெள்ளி விலை…..!

வெள்ளி விலையானது இன்று ஒரே நாளில் இருமுறை சரிந்துள்ளது.

தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறங்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலையானது நேற்று கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 850-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

அதே போல் இன்று காலையும் சரிந்த தங்கம் விலை கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது. வெள்ளியும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 55 குறைந்து ரூ. 350-க்கும், ஒரு கிலோ ரூ. 55 ஆயிரம் குறைந்து ரூ. 3,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாலையிலும் வெள்ளி விலையானது ரூ.30,000 குறைந்து கிராமுக்கு ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.3.20 லட்சத்திற்கும் விற்பனை ஆகிறது. அதன் படி இன்று ஒரே நாளில் வெள்ளி விலை ரூ 85000 சரிந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.