Gold Rate Today | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜுன் 18) அதிரடியாக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!

அதன்படி, தங்கம் விலை நேற்று (ஜுன் 170 கிராமுக்கு ரூ.105 குறைந்து ரூ.9,200க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஜுன் 18) அதிரடியாக உயர்ந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122க்கு விற்பனையாகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.