சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று காலை மாலை என இருமுறை தங்கம் விலை குறைந்தது. மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சுழலில் இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் தங்கம் ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் ரூ. 200 உயர்ந்து ரூ. 14,100-க்கும் விற்பனையாகிறது.
காலை மாற்றமின்றி இருந்த வெள்ளி விலையும் மாலையில் உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 10 உயர்ந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.







