GOLD RATE | அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வார இறுதி நாளில் சற்று உயர்ந்தது. அதன்படி சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு, சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,130-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.