நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்திய அணி நியூசிலாந்துடன் 5 ஒரு நாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இந்தியா ஒரு டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று 2வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 43 பந்துகளில் 70 ரன்களையும்,பெவன் ஜேக்கப்ஸ் 46 பந்துகளில் 58 ரன்களையும் குவித்தனர். இந்திய தரப்பில் அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 181 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இந்திய தரப்பில் வைபவ் சூரியவன்ஷி, அக்சர் பட்டேல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 27 ரன்களையும், நமன் தீர் 17 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர்.
7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா, நிதிஷ்குமார் ரெட்டி இணை அதிரடியாக ஆடத்தொடங்கியது. நிதிஷ்குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களையும், திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 4 விக்கெட்களையும், நாதன் ஸ்மித் மற்றும் ஜேக்கப் டஃபி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
திலக் வர்மாவின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது..




