தங்க விலையானது தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த 28-ந்தேதி தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660-க்கும் விற்பனையானது.
நேற்று விடுமுறை நாளானதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







