GOLD RATE | சற்றே குறைந்த தங்க விலை ; இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400-ம் குறைந்துள்ளது.

அட்சய திருதியையின் மறுநாளான நேற்று தமிழ் நாட்டில் தங்கம் விற்பனை அமோகமாக இருந்தது. அதன் படி நேற்று தங்கம் ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும். ஒரு கிராம் ரூ.14,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும், சவரன் ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொருத்தவரை எந்தவித மாற்றமும் இல்லை. அதன் படி கிராம் ரூ.275-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.