இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மோட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொட ஜூலை 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.
அதன்படி கேப்டன் சுப்மன் கில் தலைமையில், துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடாத விராட் கோலிக்கு இந்த அணியில் இடன் கிடைத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பும்ரா ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




