#IPL2026: மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறாரா தோனி….? – அஷ்வின் தகவல்…!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றியும் 4-ல் தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. நாளை வான்கடேவில் நடைபெற உள்ள போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இத்தொடரில் காயம் காரணமாக இதுவரை பங்கேற்காமல் இருந்தார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யும் வீடியோவை சென்னை அணி வெளியிட்டுள்ளது. இதனால் மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவார் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே போல தனது யூடியூப் சேனலில் பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரர் ரவிசந்திரன் அஷ்வின் கூறியதாவது ; தோனி வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் செய்வதை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆனால் இன்று அவர் விக்கெட் கீப்பிங் செய்தார். இதனால் அவர்தான் நாளை (மறுநாள்) விக்கெட் கீப்பிங் செய்யப் போகிறார். சஞ்சு ஃபீல்டிங் செய்வார் அல்லது இம்பேக்ட் வீரராகக் களமிறங்குவார். மேலும், தோனி விளையாடுவார் என்பதில் நான் 100% உறுதியாக இருக்கிறேன். அவர் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.