தங்கம் விலை கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 -யும் சவரனுக்கு ரூ.320-வும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.1.14.880-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







