ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 – இந்திய மகளிர் அணி 216 ரன்கள் குவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. அதேபோல் இரண்டாவது ஆட்டத்திலும் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ராய்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அபாரமாக பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கேட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கௌர் 41 பந்தில் 10 ஃபோர் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து 91 ரன்கள் விலாசினார். அதேபோல ஷஃபாலி வர்மா 69 ரன்களும், அனுஷ்க ஷர்மா 28 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் பிசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணி 217 என்ற இமாலய இலக்கை துறத்தி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.