சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




