GOLD RATE: தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன…?

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது.

தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13, 560-க்கும், ஒரு சவரன் ரூ.1, 08, 480-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13, 350-க்கும், ஒரு சவரன் ரூ.1, 06, 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13, 140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.