தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. அதன்படி சனிக்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,505-க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சென்னையில் வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒருகிலோ ரூ.260,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும், சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.1,14,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெள்ளி ஒருகிறாம் ரூ.260-க்கும், ஒருகிலோ ரூஉ.260,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது




