Gold Rate | தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,400-க்கும், சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11-ம், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.222-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.