GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,290-க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.3,000 அதிகரித்து ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.