தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. இதனிடையே 25-ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை ஆனது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




