தங்கம் விலை மேலும் குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,235-க்கும், சவரனுக்கு ரூ.1240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,880-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2680 குறைந்துள்ளது.

வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நாட்கள் வரவிருக்கும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.