எல்.முருகன் ராஜினாமா செய்த ராஜ்யசபா இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து வந்த முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கடந்த அக்.13-ஆம் தேதி தனது மத்திய அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் பணிக்காக, முழுநேரமும் என்னை அர்ப்பணித்துக்கொண்டு, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் எல்.முருஜன் தெரிவித்து இருந்தார்.

எல். முருகன் பதவி விலகியதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்குகிறது. வாக்குப்பதிவு நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறும், அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.