தங்கம் விலையானது சமீப காலமாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம் சவரனுக்கு ரூ.720-யும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும் ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







