தங்கம் விலை இன்று காலை சரிவை கண்டது. அதன்படி இன்று காலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் மேலும் குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த தங்கம் விலை மாலையில் ரூ.1,040 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600க்கு விற்கப்படுகிறது.
அதே போல தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-
க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.




