தங்கம் விலையானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், கடந்த 12-ம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையானது, வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து லட்சத்தை தொட்டுள்ளது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியும் உச்சம் பெற்று வருகிறது. அதன் படி கடந்த வார இறுதி நாளான சனிக்கிழமை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 210-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கிராமுக்கு ரூ. 3-ம், பிற்பகல் ரூ. 2-ம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 215-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







