13 ஆண்டுகளை நிறைவு செய்த “கும்கி” திரைப்படம் ; டி. இமான் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!

கும்கி திரைப்படம்  வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கும்கி’. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டி. இமானின் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இமானின் பிண்ணனி இசையும் படத்திற்கு பக்க பலமாய் அமைந்தது. இந்த நிலையில் கும்கி படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டி. இமான் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கும்கி திரைப்படம்  வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்போதும் யாரேனும்  “ஒன்னும் புரியல” பாடலை  கேட்கும்போது கிடைக்கும் அன்பைக் கண்டு நான் நெகிழ்ந்து போகிறேன்

சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒரு ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தேன், அங்குள்ள ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மிகுந்த பாசத்துடன் இந்தப் பாடலைக் கேட்டார்கள்.. அவர்களுக்காகப் பாடாமல் இருக்க முடியவில்லை.  இது போன்ற தருணங்கள்தான் இசையானது ஒரு வரம் என்பதை எனக்கு நினைவூட்டுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருவது குறிப்படத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.