மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். 8வது முறையாக இன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலுக்கு பிறகு கிடுகிடுவென மீண்டும் உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று காலை ஒரு சவரன் ரூ. 61,960 க்கு விற்பனையாகி வந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பின்னர், சவரன் ஒன்றுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320 ஆக விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.360 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







